தாம்பரம், முடிச்சூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

தாம்பரம், முடிச்சூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-04 06:58 GMT

சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். முடிச்சூர் சீக்கனா ஏரியின் கலங்கலை பார்வையிட்டு அவர், உபரி நீர் முடிச்சூர் சாலையை கடந்து, அடையாறு இணைப்பு கால்வாய்க்கு செல்ல மூடுகால்வாய் அமைக்க வேண்டும். புறவழிச்சாலை அணுகு சாலையை ஒட்டி செல்லும் இணைப்பு கால்வாயை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மப்பேடு நரிக்குறவர் காலனி உள்ளிட்ட இடங்களையும் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் அதே பகுதியில் வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடை நம்பி, தாம்பரம் தாசில்தார் கவிதா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்