ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

நெமிலி புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-05-16 00:25 IST

நெமிலி புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீர் தடையின்றி கிடைக்க வேண்டும். நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர் மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது சப்- கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் பாலசந்தர், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்