காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன்

திருவாரூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன் அடைந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

Update: 2023-09-17 19:15 GMT

திருவாரூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன் அடைந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசியின்றி பள்ளிக்கு வருவதை...

தமிழக அரசு, கல்வித்துறையின் கீழ் மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இடைநிற்றல் இல்லா நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பள்ளி குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகையினை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணி சுமையினை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலை உணவு திட்டம்

இவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 750 அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 27 என மொத்தம் 777 அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் 37 ஆயிரத்து 757 பேர் பயன் அடைந்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்