பள்ளி மாணவிக்கு சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்த கலெக்டர்

மனு அளித்த 30 நிமிடத்திற்குள் பள்ளி மாணவிக்கு சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்த கலெக்டர்

Update: 2022-06-19 16:44 GMT

விழுப்புரம்

விழுப்புரம் தாலுகா திருப்பாச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் சத்யா. இவர் 11-ம் வகுப்பு படிப்பதற்காக அரசு இ-சேவை மையத்தில் சாதிச்சான்று கோரி விண்ணப்பித்தார். மேலும் மாணவி சத்யா, தனது பாட்டியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சாதிச்சான்றிதழ் விரைந்து வழங்கக்கோரி கலெக்டர் மோகனை சந்தித்து முறையிட்டார். அப்போது மாணவி சத்யா, தனது தந்தை இறந்து விட்டதாகவும், தாய் மனநிலை சரியில்லாத நிலையில், தற்போது தனக்கு மேல்படிப்பிற்காக சாதிச்சான்று அவசியம் என்பதால் விண்ணப்பித்துள்ளேன், எனக்கு உதவி செய்திடும் அளவிற்கு யாரும் இல்லை என்பதால் தங்களை நேரில் சந்தித்து சாதிச்சான்றிதழ் விரைந்து வழங்க கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளேன் என்றார். இதை கேட்டறிந்த கலெக்டர் மோகன், மாணவி சத்யாவின் குடும்ப சூழ்நிலையை அறிந்து அவர் மேல்படிப்பை தொடரும் விதமாக சம்பந்தப்பட்ட தாசில்தாரை அழைத்து உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டதன்பேரில் மாணவி மனு அளித்த 30 நிமிடத்திற்குள் சாதிச்சான்றிதழ் தயார் செய்யப்பட்டது. இதனை மாணவி சத்யாவிற்கு கலெக்டர் மோகன் வழங்கி சிறந்த முறையில் கல்வி பயின்று உயர்ந்த நிலையை அடையும்படி வாழ்த்தி அனுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்