கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது

கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-13 17:36 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மருது தேவகோட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து சோதனையிட்ட போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்