லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

க.பரமத்தி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-09-19 18:27 GMT

கல்லூரி மாணவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் குறிச்சிமலை, பாய்காரத் தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் காஜா மொய்தீன் (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது உறவினர் கும்பகோணம், மூப்ப கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக். இவரது மகன் ஹாஜி அகமது (20). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இதையடுத்து நேற்று மோட்டார் சைக்கிளில் காஜாமொய்தீன் மற்றும் ஹாஜி அகமது ஆகியோர் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

மாணவர் பலி

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ரங்கநாதபுரம் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட காஜா மொய்தீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹாஜி அகமது படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த ஹாஜி அகமதுவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஜா மொய்தீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்