சமுதாய வளைகாப்பு விழா

திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-10-21 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா திருப்புவனத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்துகொண்டு 140 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார். முன்னதாக கர்ப்பிணிகள் அனைவருக்கும் மாலைகள் அணிவித்தும், வளையல் போட்டும், சந்தனம், குங்குமம் வைத்து அட்சதை போட்டு வாழ்த்தியும், பரிசு பொருட்கள் வழங்கினார். இதையொட்டி அங்கன்வாடி பணியாளர்கள் கோலாட்டம் அடித்து ஆடினா். அவர்களுடன் தமிழரசி எம்.எல்.ஏ.வும் கோலாட்டம் அடித்து ஆடினார். தொடர்ந்து அனைவருக்கும் 5 வகை சாதங்களையும் எம்.எல்.ஏ. பரிமாறினார்.

விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சுப்பையா, மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், மடப்புரம் மகேந்திரன், நகர் செயலாளர் நாகூர்கனி, மீனாட்சிசுந்தரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்புவனம் வட்டார குழந்தைகள் நல அலுவலர் (பொறுப்பு) வாசுகி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்