கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-02-18 00:24 IST

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டையில் சமூக நலன் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நடந்தது. கிருஷ்ணராயபுரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் குரள்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பெருந்தலைவர் சுமித்ராதேவி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு பொட்டு வைத்து வளையல் அணிவித்தார். இதில், 200 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்