தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்;

Update:2023-06-14 00:15 IST


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் தலைமையில் சுற்றுச்சூழல் பாசறை துணைத் தலைவர் காசிராமன், மண்டல செயலாளர் கலியபெருமாள், மாவட்ட செயலாளர் காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்