அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர்
பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வழங்கப்பட்டது.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலாளர் முருகன், பொருளாளர் பரமசிவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி தமிழரசி ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ராணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஐன்ஸ்டீன் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் எழில்வாணன் பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரிண்டரை வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆனந்த செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவ பார்வதி நாதன் நன்றி கூறினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சாக்ரடீஸ், சங்கர் கலந்து கொண்டனர்.