மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துகாங்கிரசார் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Update:2023-07-24 00:30 IST

ராசிபுரம்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராசிபுரத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு காந்தி மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகர தலைவர் ஸ்ரீராமலு முரளி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் தனசேகர் மற்றும் நிர்வாகிகள் கோபால், தினேஷ், சோழராஜன், சக்திவேல், கோவிந்தராஜ், பெருமாள், பழனிவேல், தினேஷ்குமார், கார்த்திக் ராஜா, பழனிசாமி கவுதம், யுவன், விஜயகுமார், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்