காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மேல்விஷாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் விநாயகம், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நிஷாந்த் அகமத், ஆற்காடு வட்டார தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அக்ராவரம் கே.பாஸ்கர் மற்றும் மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகிழ்த்தினர்.
எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கி ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதாகவும், அதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடபெற்றது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் நந்தகுமார், வாலாஜா ஒன்றிய தலைவர் கணேசன், முன்னாள் ராணுவத் துறை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் புருஷோத்தமன், ஆற்காடு நகர தலைவர் பியாரே ஜான், வாலாஜா நகர தலைவர் மணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.