காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி எம்.பி.க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர், வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை நகர தலைவர் இ.பாரத் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய தலைவர்கள் ஜானிஜாவித், தண்டபாணி, சாந்தசிலன், முன்னிலை கைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கோடு மத்திய மோடி அரசு செயல்படுவதைகவும், கோர்ட்டை தன்னிச்சையாக செயல்பட விடு, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் நெடுமாறன், மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெகநாதன் நன்றி கூறினார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி சட்டசபை தொகுதி காங்கிரஸ் சார்பில் பஸ் நிலையத்தில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தபரேஷ் தலைமை வகித்தார். ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொது செயலாளர் அனுமுத்து, எஸ்.சி. பிரிவு மாநில பொது செயலாளர் சக்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.