டிராக்டர் மோதி கட்டிட மேஸ்திரி பலி
போளூரில் டிராக்டர் மோதி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.;
போளூர்
போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் விஷ்வா (வயது 18), கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களான ஆகாஷ் (20), சஞ்சய் (20) ஆகியோருடன் நேற்று வேலைக்காக தேவிகாபுரம் சென்றனர்.
அங்கு வேலையை முடித்துவிட்டு 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் போளூருக்கு வந்து கொண்டிருந்தனர். மட்டபிரையூர் கூட்ரோடு அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டரும் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் விஷ்வா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவிக்கு பின்னர் 3 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.