கொட்டவாக்கம் ஊராட்சியில் சிறு பாலம் கட்டும் பணி

சிறு பாலம் கட்டும் பணியை காஞ்சீபுரம் எம்.பி, காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.;

Update:2022-10-07 14:50 IST

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், கொட்டவாக்கம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணியை காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் ப.லோகு தாஸ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரிகா ராஜேந்திரன், கிளை கழக நிர்வாகிகள் ரங்கன், குப்பன், ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்