மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

வெறையூர் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.;

Update:2023-03-24 22:31 IST

வாணாபுரம்

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் பொன்முடி (வயது 33), கட்டிட தொழிலாளி.

இவர் வெறையூர் அருகே அண்டம்பள்ளம் கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பொன்முடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வெறையூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்