விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.;
சீர்காழி;
சீர்காழி போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி செந்தில் குமார், சம்பத். சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பேசுகையில், விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது. கடந்த வருடம் வைத்த இடத்திலேயே வைக்க வேண்டும். சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை பள்ளி, ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் வைக்கக்கூடாது. விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு தினமே சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சாதி, மதம் சார்ந்த பாடல்களை ஒளிபரப்ப கூடாது. ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் கொட்டகைகளில் சிலைகளை வைக்கக்கூடாது என கூறினார்.