178 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

கோவை மாவட்டத்தில். நேற்று 178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 மாதங்களுக்கு பின்னர் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.;

Update:2022-07-21 21:29 IST


கோவை மாவட்டத்தில். நேற்று 178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 மாதங்களுக்கு பின்னர் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

முதியவர் பலி

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 167 ஆக இருந்த நிலையில் நேற்று 178 பேருக்கு கொரோனா தொற்றாக அதிகரித்தது.

கொரோனா பரவலுக்கு கடந்த 3 மாதங்களாக சாவு ஏற்படாத நிலையில், நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,618பேர் பலியாகி உள்ளனர்.

157 பேர் வீடு திரும்பினர்

கோவை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34ஆயிரத்து 192 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 157 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 401 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 1173 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்