பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா தைலாபுரம் தோட்டத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தைலாபுரம் தோட்டத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.;
திண்டிவனம்,
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (வயது 82). இவர் தனது மனைவி சரஸ்வதி அம்மாளுடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறார்.
டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமதாசுக்கு திடீரென தொண்டைவலி ஏற்பட்டது. இதையடுத்து சோர்வுடன் காணப்பட்ட ராமதாஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
கொரோனா தொற்று
பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.