கொரோனா தடுப்பூசி முகாம்
தாயில்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
தாயில்பட்டி,
தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெற்றிலையூரணி, தெற்குஆனைக்குட்டம், சத்திரப்பட்டி, வனமூர்த்திலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 310 பட்டாசு ஆலை பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிகாளை தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். தொழில் நுட்ப உதவியாளர் சீனிவாசன் மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.