எடப்பாடியில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

எடப்பாடியில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.;

Update:2023-09-03 04:38 IST

எடப்பாடி:

எடப்பாடியில் நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 594 குவிண்டால் எடை கொண்ட 1,674 பருத்தி மூட்டைகள் ரூ.42 லட்சத்து 67 ஆயிரத்து 354 விற்பனையானது. ஒரு குவிண்டால் ரூ.6,899 முதல் ரூ.7,359 வரை ஏலம் போனது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்தனர்.

மேலும் செய்திகள்