அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.18 லட்சத்தில் பருத்தி ஏலம்

அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.18 லட்சத்தில் பருத்தி ஏலம் நடந்தது.;

Update:2023-09-27 01:00 IST

அரூர்:-

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தில் 170-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 680 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் எம்.சி. 5 ரக பருத்தி குவிண்டால் ரூ.5,119 முதல் ரூ.7,319 ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூ.18 லட்சம் பருத்தி ஏலம் போனது என்று செயலாளர் அறிவழகன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்