ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2022-12-10 19:30 GMT

எடப்பாடி:-

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் 1,050 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து இருந்தனர். அவை 220 லட்டுகளாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 100 முதல் ரூ.9 ஆயிரத்து 9 வரையும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 700 முதல் ரூ.5 ஆயிரத்து 625 வரையும் விற்பனையானது. மொத்தம் 1,050 பருத்தி மூட்டைகள் ரூ.26 லட்சத்துக்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிற 17-ந் தேதி நடைபெறும் என்று கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்தனர். 



Tags:    

மேலும் செய்திகள்