கவுன்சிலர்கள் காரசார விவாதம்
தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.;
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மலர்கொடி சேதுராமன், செயல் அலுவலர் ஆளவந்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், கழிவுநீர் வாய்க்கால்கள், மின்விளக்குகள், சாலை வசதி உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்துகொண்டு கவுன்சிலர்கள் காரசார விவாதம் செய்தனர். அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் பதில் அளித்து பேசினார். இதில், பணி நியமனக்குழுத் தலைவர் பாலாமணி பழனிமுருகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.