மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

கூடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

Update: 2022-08-05 16:11 GMT

கூடலூர்,

கூடலூர் கோழிப்பாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- கல்லூரியில் 2022-2023-ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதவியல், இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம், புவியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், வருகிற 10-ந் தேதி பி.பி.ஏ., பி.பி.ஏ. (சி.ஏ.), பி.காம்., பி.காம். (சி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும், 11-ந் தேதி பி.ஏ. ஆங்கிலம், சமூக பணியியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

இதில் கலந்துகொள்பவர்கள் தங்களது மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் 5 நகல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தங்களது பெற்றோருடன் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு பெறுபவர்கள் சேர்க்கை கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்