வீரபாண்டி
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபாண்டி பகுதியில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் பரமசிவம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் விலையை ஒரு லிட்டருக்கு பசும்பாலுக்கு 45 ரூபாயும், எருமை பாலுக்கு 55 ரூபாயும் என அறிவிக்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீதம் மானியம் விலையில் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டன.