மின்கம்பத்தை உரசிய மாடு-பன்றிகள் சாவு

மின்கம்பத்தை உரசிய மாடு-பன்றிகள் செத்தன.

Update: 2022-07-26 18:20 GMT

அரியலூரில் பெரம்பலூர் சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்நிலையில் இந்த மின் கம்பத்தை உரசிச்சென்ற ஒரு பசு மாடும், 2 பன்றிகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அந்த வழியாக சென்றவர்கள், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விலகிச்சென்றனர். மேலும் போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது, மின்கசிவு காரணமாக அந்த மின்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

அரியலூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினமும் அதே இடத்தில் ஒரு ஆடு இறந்ததால், மின்சாரம் பாய்ந்து அந்த ஆடு இறந்ததா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மின்கம்பம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. அங்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை இந்த மின்கம்பத்தை ஒட்டியே நிறுத்துவார்கள். இந்நிலையில் அதிகாலையில் மின்கம்பத்தில் உரசிய பசு மற்றும் பன்றிகள் செத்ததால், அந்த வழியாக சென்றவர்கள் சுதாரித்துக்கொண்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் மனித உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்