100-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். ேமலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-07 17:48 GMT

மன்னார்குடி;

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். ேமலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

சாலையில் திரியும் மாடுகள்

மன்னார்குடி நகர பகுதியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிக அளவு மாடுகள் சுற்றித் திரிந்தன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த இடையூறுகளுக்கு உள்ளாகினர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். இது குறித்து மன்னார்குடி நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ரூ.500 அபராதம் விதிப்பு

இதைத்தொடர்ந்து மன்னார்குடி நகரில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சித் தலைவர் மன்னை சோழராஜன் நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதன்படி நேற்று முன்தினம் இரவு சாலையில் சுற்றித் திரிந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து நகராட்சி வளாகத்துக்குள் கொண்டுவந்து அடைத்தனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.இது குறித்து நகராட்சி தலைவர் சோழராஜன் கூறியதாவதுமாடுகள் சாலைகளில் திரிவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே மாடு வளர்ப்பவர்கள் மாட்டை சாலையில் திரியவிடாமல் வளர்க்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியுள்ளோம்.

கோ சாலைகளில்ஒப்படைக்கப்படும்

முதல் முறை சாலைகளில் பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 2-ம் முறை சாலையில் மாடுகளை திரியாவிட்டால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதற்கு பிறகும் சாலையில் மாடுகளை திரியவிட்டால் மாடுகள் பிடிக்கப்பட்டு கோ சாலைகளில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் கூறினார். அப்போது நகராட்சி துணைத்தலைவர் கைலாசம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்