கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு விழா

காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

Update: 2022-06-20 18:20 GMT

காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், இணைந்து 15 நாட்கள் நடத்திய கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி கலந்துகொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். பயிற்சி முகாமின் பயிற்சியாளரான சென்னையை சேர்ந்த ஷ்யாம் சுந்தர், மானகிரி அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் திருப்பதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்