கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்;

Update:2023-09-02 00:43 IST

கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிப்பு

*திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் காதர்ஜான் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்ற போது, தஞ்சை மாவட்டம் வடக்குவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.600-ஐ பறித்து சென்றதாக பொன்மலைப்பட்டி போலீசாரால் ைகது செய்யப்பட்டார். இதுபோல் திருச்சி அரியமங்கலம் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் காந்திமார்க்கெட்டை சேர்ந்த நாசர் (49) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச்சென்ற அரியமங்கலத்தை சேர்ந்த வினோத் (37) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்ற 3 பேர் கைது

*திருச்சி விமான நிலையம் அருகே வயர்லஸ் சாலையில் ஸ்டார் நகர் பகுதியில் ஸ்கூட்டரில் வைத்து கஞ்சா விற்றதாக காமராஜ்நகரை சேர்ந்த மணிகண்டன் (25), ராஜகுரு (24) ஆகியோரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவும் ரூ.200 மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி மதுரை சாலையில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த இப்ராகிம்ஷா (48) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இரும்புக்கடை ஊழியர் மீது தாக்குதல்

* திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின் மரியதாஸ் (34). இவர் இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவரை தாக்கியதாக பாலக்கரை பகுதியை சேர்ந்த ராஜ்கமல் (24), ஹரிபிரசாத் (22), சஞ்சய்ஜோசப் (20) ஆகிய3 பேரையும் பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

இரு தரப்பினர் இடையே மோதல்

*முசிறி அருகே உள்ள மேல வெள்ளூரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் சாந்தகுமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகள் பிரவீனா (23) திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடேசன் குடும்பத்துக்கும், சண்முகம் குடும்பத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 2 தரப்பினர் கொடு்த்த புகாரின் பேரில் முசிறி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்