குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்்தது;
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகர பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்கள் குழு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதில், குழந்தைகள் பாதுகாப்புகுழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.