திருக்கோவிலூர் அருகேகார் டிரைவரை கத்தியால் வெட்டி பணம் பறிப்புவாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே கார் டிரைவரை கத்தியால் வெட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-05-22 00:15 IST


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள காடகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஸ்ரீராம் (வயது 21). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி பிரசவத்திற்காக திருக்கோவிலூரில் விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க, ஸ்ரீராம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த மோகன் மகன் சார்முகிலன் (வயது 21 ), சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும், ஸ்ரீராமை வழிமறித்தனர்.

கத்திவெட்டு

அப்போது, சார்முகிலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டி தாக்கி உள்ளார். இதில் கீழே விழுந்த ஸ்ரீராம் கூச்சலிட்டார். அதற்குள் விநாயகமூர்த்தி ஸ்ரீராம் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்தார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஸ்ரீராம் அளித்த புகாரின் போில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

இஙதில் பெங்களூருவுக்கு தப்பி செல்ல முயன்ற சார்முகிலனை போலீசார் கைது செய்தனர். விநாயகமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்