களக்காடு-சேரன்மாதேவி சாலையோரங்களில் வாழைத்தார் கழிவுகளை வீசுவதால் விலங்குகளுக்கு ஆபத்து; வனத்துறையினர் எச்சரிக்கை

களக்காடு-சேரன்மாதேவி சாலையோரங்களில் வாழைத்தார் கழிவுகளை வீசுவதால் விலங்குகளுக்கு ஆபத்து என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2023-04-08 01:17 IST

களக்காடு:

களக்காடு வனச்சரகர் பிரபாகரன் கூறுகையில், வாழைத்தார் அறுவடை செய்யும்போது வரும் கழிவுகளை சிலர் களக்காடு-சேரன்மாதேவி சாலையோரங்களில் குறிப்பாக கொழுந்துமாமலை பீட் பகுதியில் வீசி செல்கின்றனர். இவ்வாறு வீசப்படும் வாழைத்தார் கழிவுகளை உட்கொள்வதற்காக காட்டு பன்றி, கரடி, கடமான் போன்ற வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளிவருகின்றன. அவைகள் சாலையோரங்களில் உலா வருவதால் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வனவிலங்குகளால் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து உள்ளது.

எனவே களக்காடு-சேரன்மாதேவி சாலையோரங்களில் வாழைத்தார் கழிவுகளை வீசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வாழைத்தார் கழிவுகளை வீசுவோர் மீது புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், வன பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்