ஆலச்சம்பாளையம் காட்டூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

ஆலச்சம்பாளையம் காட்டூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.;

Update:2023-06-09 02:18 IST

எடப்பாடி:

எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள அருள்ஞான பாலமுருகன் கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்துரத புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர், அரோகரா கோஷம் முழங்க பக்தர்களுடன் சேர்ந்து முத்து ரதத்தினை வடம் பிடித்து இழுத்து வந்தார். முன்னதாக அருள்ஞான பாலமுருகன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முருகபெருமானை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்