சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு

Update: 2023-08-26 20:03 GMT

அன்னதானப்பட்டி 

சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 73). இவர் கடந்த 20-ந் தேதி சங்ககிரி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்