ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்தசாலை விபத்துகளில் 2 பேர் சாவு

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.;

Update:2023-09-23 01:15 IST

ஓசூர்

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.

லாரி டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் தாலுகா ஆண்டவூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). லாரி டிரைவர். இவர் கடந்த 20-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் லாரியை ஓட்டி சென்றார். சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநில வாலிபர்

பீகார் மாநிலத்தை சேர்ந்த அனோஜ்குமார் ராய் (28). இவர் ஓசூர் அருகே நாகொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 20-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் கொத்த கொண்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில், படுகாயம் அடைந்த அனோஜ்குமார் ராய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்