ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் ரெயிலில் அடிபட்டு சாவு

மொரப்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

Update: 2022-07-04 15:54 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

ரெயில் மோதியது

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள சிந்தல்பாடியை சேர்ந்தவர் துரையரசன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சுரேந்திரன் (வயது 38). இவர் பி.எச்்டி. படித்து விட்டு வெளிநாட்டில் பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் சமீபத்தில் சொந்த ஊரான சிந்தல்பாடிக்குவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிந்தல்பாடியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சுரேந்தர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார்.

விசாரணை

இதுகுறித்து சேலம் ரெயில்வே நிலைய மேலாளர் ராஜேஷ்குமார் பதாக் மொரப்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபண்ணா மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று சுரேந்திரனின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்