குருஞ்செய்தி அனுப்பியதில் இருதரப்பினர் மோதல்; தொழிலாளி சாவு

ராயக்கோட்டை அருகே குறுஞ்செய்தி அனுப்பியதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-23 18:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே குறுஞ்செய்தி அனுப்பியதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் குறுஞ்செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் சந்திரன். தொழிலாளி. இவரது மகன் (17 வயது) சிறுவன். மெக்கானிக். இவரது நண்பர் சாரதி. இவரது செல்போனில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி (மெசேஜ்) வந்தது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் 17 வயது சிறுவன், சாரதி, முருகன், ரஞ்சித் ஆகிய 4 பேரும் ராயக்கோட்டை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்திற்கு சென்றனர். அங்கு முனிராஜ் (44) என்பவரை சந்தித்து உங்கள் மகன், எனக்கு தவறான மெசேஜ் அனுப்பி உள்ளான் என கேட்டனர். அதற்கு முனிராஜ், அவரது தந்தை தூர்வாசன் (65) ஆகிய 2 பேரும் சேர்ந்து அப்படி தான் குறுஞ்செய்தி அனுப்புவான். உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு 17 வயது சிறுவனை அடிக்க வந்தனர்.

மோதல்

அப்போது அந்த சிறுவன் தனது மாமா கோவிந்தன் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அந்த தகவலை கேட்டு சிறுவனின் தந்தை சந்திரன் (42), தாய் எல்லம்மா ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது முனிராஜ் சந்திரனை கன்னத்தில் தாக்கினார். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது தூர்வாசன் உள்பட சிலர் சேர்ந்து சந்திரனை கீழே தள்ளி விட்டு தாக்கினார்கள்.

இதைத் தொடர்ந்து சந்திரனை, சிறுவன் மற்றும் குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் சந்திரன் இறந்து விட்டார். இது குறித்து சந்திரனின் மகன் 17 வயது சிறுவன் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (2) (கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இல்லாமல் மரணம் விளைவித்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்