மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு

திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-05-24 19:53 IST

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலியானார்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 30), வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை திண்டிவனம் சாலை கூட்ரோடு அருகில் செல்லும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=====

Tags:    

மேலும் செய்திகள்