திருமண நாளில் விஷம் குடித்த புதுப்பெண் சாவு

நெல்லை அருகே திருமண நாளில் விஷம் குடித்த புதுப்பெண் இறந்தார்.;

Update:2022-06-04 01:23 IST

நெல்லை:

நெல்லை அருகே மேல தாழையூத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 26). இவருக்கும், மருதபுரத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது. திருமண வீட்டில் மகாலட்சுமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் மகாலட்சுமி, டாக்டரிடம் தான் விஷம் குடித்ததாக கூறினார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல் நலம் மோசமடைந்ததால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்