போலீசாருக்கு கொலை மிரட்டல்; அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது

சங்கரன்கோவிலில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-08-02 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஆடித்தபசு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காந்திநகர் பொட்டல் மைதானத்தில் சின்னக்கோவிலான்குளம் போலீஸ்காரராக பணிபுரியும் வீரையா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசாமி மகன் மதியழகன் (வயது 25) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தார். இதனை தட்டிக் கேட்ட வீரையாவை மதியழகன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் டவுண் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தனர்.

Advertising
Advertising

இதேபோல் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன்கள் கடற்கரை, கதிரேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறு கொண்டிருந்தனர். இதனை சங்கரன்கோவில் டவுண் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் செல்லப்பாண்டி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடற்கரை, கதிரேசன் ஆகியோர் செல்லப்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடற்கரை, கதிரேசன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்