உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது - செங்கோட்டையன்

உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார்.;

Update:2025-11-09 14:32 IST

ஈரோடு,

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முறையில் தான் 45 ஆண்டுகாலம் என்னுடைய பணிகளை ஆற்றி வருகிறேன். என்னை பொறுத்தவரையிலும் இளவரசரை போல் என்றைக்கும் இருந்ததில்லை .எளிமையான வாழ்க்கை நடத்தி வருகின்றேன். அப்படி நடத்திய காரணத்தின் அடிப்படையில் தான் மூன்று முறை வாக்காளரை தேர்தல் களத்தில் வருகை தந்து வாக்கு கேட்காத காலத்திலே நீ எங்கள் வீட்டு பிள்ளை என்ற முறையில் அனைவரும் வாக்களித்து வெற்றி பெற்ற வரலாறு இந்த தொகுதியில் இருக்கிறது

இந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். இந்த பகுதியை சார்ந்திருக்கிற வாக்காளர் பெருமக்கள், கழகத்தின் முன்னோடி பொறுப்பாளர்கள், நம்முடைய கூட்டணியை சார்ந்தவர் . அதற்கு மேலும் கருத்துகள் சொல்வது சரியாக இருக்காது.

நேற்றைய முன்தினம் பல்வேறு சங்கங்கள் சார்பில் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் எனக்காக கண்ணீர் சிந்தும் அளவு கடிதத்தில் உள்ளது. உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது.

உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை. தொண்டர்களுக்காக முன்னின்று தியாகங்கள் செய்தவர். அதேபோல ஜெயலலிதாவும் இயக்கத்தைக் காக்க நகை, பொருட்கள் அனைத்தும் 1989ஆம் ஆண்டில் வழங்கி இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தினார்.

அவர்களைப் பொறுத்தவரை மன்னிக்கின்ற உள்ளம், கருணை உள்ளம், தொண்டர்களை காப்பதற்கு என்ன உருவாக்க வேண்டுமோ அதை மனதில் வைத்துதான் அந்த பணிகளை சீரோடும் சிறப்பாகவும் நடத்தினார்கள். அந்த வழியில் நாங்களும் பயணங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்