சம்பா, தாளடி சாகுபடியில் மகசூல் வீழ்ச்சி

மணல்மேடு பகுதியில் சம்பா, தாளடி சாகுபடியில் மகசூல் வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

Update: 2023-01-30 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டது, சன்னரகமான ஆடுதுறை 38 மற்றும் 46, திருச்சி 3 ஆந்திரா பொன்னி போன்ற ரக நெல் ரகங்கள் பயிரிடப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மணல்மேடு பகுதிகளில் 5 இடங்களில் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்திருந்தாலும் மணல்மேடு பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அடிக்கடி மழையும், வெயிலும் மாறி, மாறி வந்ததால் விளைச்சல் நெல் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் விவசாயி ஒருவர் கூறுகையில், ஆந்திரா பொன்னி எனப்படும் பிபிடி என்ற நெல் ரகத்தை பயிரிட்டிருந்தேன். இந்த ரகம் ஏக்கர் ஒன்றுக்கு 1,200 முதல் 1400 கிலோ வரை பல ஆண்டுகளாக நல்ல மகசூல் கொடுத்து வந்ததது. கடந்த 2 ஆண்டுகளாக 1000 கிலோவில் இருந்து 1100-க்குள் மகசூல் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு 5 ஏக்கரில் மட்டுமே ஆந்திரா பொன்னியை சாகுபடி செய்தேன். தற்போதும் மகசூல் குறைந்துள்ளது. , ஏக்கர் ஒன்றுக்கு 1000 கிலோவிற்குள்ளாகவே மகசூல் கிடைத்துள்ளது. பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்