மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறு வீடியோ - வாலிபர் கைது

மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-03-22 06:11 GMT

சென்னை,

2023-24ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த 20-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் தொடங்கி வைக்கப்படும் என்றும், இதற்காக 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற உள்ள மகளிரை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பிரதீப் என்பவரை கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்