குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு

முத்தூர் மேட்டாங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் பகுதியில் 3 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகிறது.;

Update:2023-01-23 23:13 IST

முத்தூர் மேட்டாங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் பகுதியில் 3 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகிறது.

காவிரி குடிநீர்

கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ள குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் இருந்து காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் ஆகிய நகராட்சி பகுதிகளுக்கும் முத்தூர், மூலனூர், குண்டடம் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கும் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முத்தூர் - காங்கயம் பிரதான சாலை மேட்டாங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் பகுதியில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகிறது.

மேலும் உடைப்பு ஏற்பட்டு உள்ள இடங்களிலும் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் பிரதான சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விடுகிறார்கள். குழாய் உடைப்பினால் குடிநீர் சென்று வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

துரித நடவடிக்கை

எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் செயய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்