கடலூரில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடித்து அகற்றம்

கடலூரில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை மாநகராட்சி அதிகாாிகள் இடித்து அகற்றினா்.

Update: 2022-08-04 16:26 GMT

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் மழைநீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு, கடைகள், சுற்றுச்சுவர் கட்டி இருந்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் மழைநீர், கழிவுநீர் வடியாமல் இருந்தது. சுகாதார மைய அலுவலகத்திற்குள் கழிவுநீர் சென்று வருகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இது வரை அவர்கள் அதை அகற்றாமல் வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி நகர் நல அலுவலர் அரவிந்த்ஜோதி தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வம் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 ஆக்கிரமிப்பு வீடுகள், 2 கடைகள், சுற்றுச்சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். தொடர்ந்து இது போன்ற ஆக்கிரமிப்புகள் செய்தால் அதிரடியாக அகற்றப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்