கடலூரில் அரசு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் அரசு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.;

Update:2023-04-07 00:15 IST

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரும், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவருமான ஜெயச்சந்திரராஜா மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அரசு பணியாளர் சங்கம், நியாய விலைக்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் சேகர், தேவராஜ், தங்கராசு, செல்வராஜ், கந்தன், நடராஜன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்