தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் நேற்று தொழிலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் விஜய் ஆனந்த், மாநில செயலாளர் பிரதீப் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையை 6 மாதமாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.