வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-21 02:22 IST

தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் சிங்காரம், மாவட்ட செயலாளர்கள் மாதவ சங்கர், முத்துமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஆவுடையப்பன், மாநில செயலாளர் வேல்முருகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

2021-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணி வரன்முறை செய்யப்படாமல் உள்ளனர். அவர்களுக்கு பணி வரன்முறை விரைவாக செய்யப்பட வேண்டும். பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டல அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பிரேமா, ஆறுமுகம், டேனியல் கமல் சபரிநாயகம், வேல்முருகன் இணைச்செயலாளர் பிரதீப் குமார், பொருளாளர் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட தலைவர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்