வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி வருவாய் ஆய்வாளர் மீதான தாக்குதலை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
சங்கராபுரம்.
திருச்சி மாவட்டம், துறையூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்யாணி, வட்ட தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட செயலாளர் ஆனந்த், வட்ட பொருளாளர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர்கள் நிறைமதி, அன்பழகன் மற்றும் வட்ட கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.